பிரபாகரன் சண்முகநாதன்

சிறுகதைகள் | கட்டுரைகள் | மொழிப்பெயர்ப்பு | விவாதங்கள்

ஜார் ஒழிக!

(எழுத்தாளர் சாம்ராஜின் ‘ஜார் ஒழிக’ சிறுகதை தொகுப்பு குறித்து) “எல்லா மதிப்பீடுகளுக்குமான மறு மதிப்பீடு தான் காலத்தின் தேவை” –நீட்சே சாம்ராஜின் மொழி அலங்காரங்கள் அற்றது. அதன் இயல்பே அதன் அழகு. சொற்களின் எதார்த்த கூட்டிசைவு படைப்போடு ஒன்ற வைத்துவிடுகிறது. கதைகளின் முதல் வரிகளே அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட களத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் நோக்குடன் காத்திருப்பவை. ‘மரியபுஷ்பம் அவசர அவசரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள்’ என்றோ ‘கணேசனோடு எப்போது அந்த வார்த்தை ஒட்டிக் கொண்டது என கணேசனுக்கே…

மாயம் அல்லது கடவுளின் கை

(சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் குறித்து) வாழ்வு புதிரானது. இயல்பு அல்லது விதி என நாம் அழைக்கிற ஏதோவொன்று உருவாக்குகிற நிஜத்தை காட்டிலும் சிறந்த ஒரு புனைவை எழுதவே படைப்பாளிகள் விழைகிறார்கள். நிஜத்தில் நிகழும் புனைவு என்பது புனைவின் புனைவைவிட மாயம் நிறைந்ததாக கற்பனைக்கு எதிரானதாக அமைவதை நம்மால் பார்க்க முடிகிறது. இயல்பு இவ்வாறு இருக்கும்போது படைப்புகளில் தர்க்கத்தை உருவாக்குகிற, எதார்த்த படைப்பு மனநிலைக்கு எதிரானதாக, ஆனால் அதன் கூறுகளை கவர்ந்துகொள்ளக்கூடிய கதை சொல்லல் பின்னணியில் வருகிற முக்கியமான…

மருள்- வாசகப் பார்வைகள்

மருள் சிறுகதை தொகுப்பு குறித்து வாசகர்கள், நண்பர்களின் கடிதங்கள் அன்புள்ள பிரபாகரன், உங்கள் மருள் சிறுகதைத் தொகுப்பு வாசித்து முடித்துள்ளேன். தொகுப்பை முன்வைத்து எழுதுவதற்கு முன் ஓரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். 2023 ஜூலை 7 அன்று எழுத்தாளர் ஜெயமோகன் ஒருங்கிணைத்த ஆலயக்கலை வெள்ளிமலை வகுப்பிற்கு அந்தியூரிலிருந்து ஒன்றாக சென்றோம். கோவை அரசு மருத்துவர் வேலு சார், அவரது வண்டியில் நம்மை ஏற்றிக்கொண்டார். அதற்கு முன்பும் பல முறை நாம் சந்தித்து இருக்கிறோம். அப்போதெல்லாம் கேட்காதக் கேள்வியை…